தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் போலீஸ் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழக அரசின் சமூக நலத்துறை ஆணையர்,தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி தமிழகம் கேரளாவை இணைக்கும் குமுளி மலைப் பாதை, லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, நோயாளிகள் படுக்கை அறை பிரிவை ஆய்வு செய்தார்.
பின்னர் டாக்டர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை, மருந்துகளின் இருப்பு, பாம்பு கடி மருந்து உள்ளிட்ட அவசர கால மருந்துகள் குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்னரசனிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உத்தமபாளையம் ஆர்டிஓ தாட்சாயிணி, தாசில்தார் சுந்தர்லால் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.