மதுரை டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் மாணவர் மன்றம் சார்பாக அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உறவின்முறை செயலர் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். மாணவர்மன்றச் செயலாளர் மதுமிதா முன்னிலை வகித்தார். மாணவர் மன்றத் தலைவர் ஜான்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் சரவணன் சிறப்புரை
யாற்றினார்.
கீழச்சந்தைப்பேட்டை நாடார் உறவின்முறை சார்பில் வன்னியராஜன், பார்த்தீபன் குழந்தைகளுக்கு நோட்டு, பேனாக்கள் வழங்கினார். ஆசிரியர் பாக்கிய லெட்சுமி விழா ஏற்பாடுகளைச் செய்தார். ஆசிரியை கீதா நன்றி கூறினார். அனைத்து குழந்தைகளுக்கும் நோட்டுகள் மற்றும் பேனா வழங்கப்பட்டது.