கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வினியோகம் செய்வதெற்கென பிரத்யேக பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது..
கொரோனா கால நேரங்களில் பொது மக்களுக்கு உணவு வழங்கியும்,கொரோனா நிதியாக முதன் முதலாக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ்.
இந்நிலையில் கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு புதிய பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது..
மருத்துவமனையின் உள்ளே பெரிய உணவு பாத்திரங்களை கொண்டு செல்வதற்கும் மேலும் மருந்துகளை ஆங்காங்கே உள்ள மருத்துவ பிரிவுகளுக்கு எடுத்து செல்லவும் வசதியாக பிரத்யேக பேட்டரி ஆட்டோ வாகனத்தின் சாவியை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகணேஷ் கோவை அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் நிர்மலாவிடம் வழங்கினார்..
இது குறித்து டீன் மருத்துவர் நிர்மலா கூறுகையில்,மருத்துவமனை வளாகத்திற்கு மிகவும் தேவையான இந்த வாகனத்தை வழங்கிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனருக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..
தொடர்ந்து பேசிய,ஸ்ரீதேவி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கி வரும் சேவையை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர்,இதன் தொடர்ச்சியாக இந்த பேட்டரி வாகனத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளதாக கூறினார்..
தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்..