பழனி அருகே பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் விசிக கவுன்சிலர் கோரிக்கை..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.
இந்த பள்ளியின் கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து மேற்கூரையின் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து மழை காலத்தில் வகுப்பறைக்குள் குளம் போல் மழை நீர் தேங்கி காணப்பட்டு வருகின்றன.
மேலும் கட்டிடம் இடியும் நிலையில் காணப்பட்டு வருவதால் எந்நேரமும் உயிர்பலி வாங்க காத்துக் கொண்டிருப்பதாக பெற்றோர்கள் உணர்ந்து பள்ளிக்கு குழந்தைகளை பயத்துடனே அனுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு சட்டமன்ற நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.
எனவே உடனடியாக நடுநிலைப் பள்ளியில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆயத்தப் பணிகளை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி விசிக கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் போர்க்கொடி ஏந்தி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் இப்பள்ளியில் 100 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி காணப்பட்டு வருவதால் தற்சமயம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் பள்ளி செயல்பட்டு வருகின்றது.
உடனடியாக அதிகாரிகள் இந்நிகழ்வில் தலையிட்டு பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டி பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் அமர வைத்து கல்வி கற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்…