தென்காசி மாவட்டத்தை சார்ந்த மிஸ்பா நூருல் ஹபிபா என்கிற மாணவி உலக அளவில் சாதனை நடத்தியுள்ளார் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ள மாணவி முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன்அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

மாணவி மிஸ்பா நூருல் ஹபி பா அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு படிக்கின்ற பொழுது யோகா விளையாட்டில் மாநில அளவிலும் இந்திய அளவிலும் பரிசு பெற்றுள்ளார்

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியன் லெவல் போட்டியில் கோல்ட் மெடல் பெற்றுள்ளார்

அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டும் ஆசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார்

2018 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற யோகா போட்டியில் குளோபல் விருது பெற்று உலக சாதனை படைத்துள்ளார் உலக சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஶ்ரீ ஶ்ரீ யோகா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை விருதையும் பெற்றுள்ளார்

கடந்த 2022 ஆம் ஆண்டில் யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட் விருது பெற்றுள்ளார்

கடந்த 2024 ஆம் ஆண்டு பெல்ஜியம் தமிழ்ச்சங்கம் சார்பில் மதுரை யாதவா கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச முத்தமிழ் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்று சிங்கப்பண் விருது பெற்றுள்ளார்

2024 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஸ்டார் பிக்ஸ் எக்ஸலண்ட் அவார்ட் பெற்றுள்ளார்

இதுவரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விருதுகளை மாவட்ட அளவில் மாநில அளவில் தேசிய அளவில் உலக அளவில் பெற்று சாதனை படைத்துள்ளார்

இவருக்கு பயிற்சியாளராக குரு கண்ணன் என்பவர் இருந்து வருகிறார் ….

இன்று மாணவி மிஸ்பா நூருல் ஹபி பா அவர்கள் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் அவர்களை சந்தித்து விளையாட்டு துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்று கூறினார்

மாணவி வாழ்த்து பெற்ற போது கடையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப் ,மாவட்ட பிரதிநிதி அய்யன் சாமி கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், கிளைக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் வெக்காலி பட்டி செயலாளர் பால்ராஜ் உதயநிதி நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தற்போது அந்த மாணவி இயற்கை மருத்துவர் பட்டப்படிப்பில் தனியார் கல்லூரியில் சேர்ந்து உள்ளார் தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ள அந்த மாணவிக்கு கல்லூரி கட்டண சலுகை பெற்று கொடுக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *