அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர செயலாளர் ரகுபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, வரவேற்றார். பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 218 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், அருண் குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் அம்சவள்ளிகண்ணன், மஞ்சுளாகணேசன், தனலட்சுமிசசி, மற்றும் டாக்டர் கோகுல் கோவிந்தராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகந்தி கண்மணிதிரவியம், செந்தில்குமார், இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.