திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில், அஇஅதிமுக சார்பில் கழகத்தின் 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வலங்கைமான் கிழக்கு ஒன்றிய ஆஇஅதிமுக ஆலங்குடி முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா ஆகியரியின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் கிழக்கு& ஒன்றிய செயலாளர் சாத்தனூர் யூ. இளவரசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் ஆலங்குடி கு. நடராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பாவா கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஹாஜாமைதீன், தொழுவூர் முனுசாமி, ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், பாசறை ஒன்றிய செயலாளர் சங்கர், இலக்கிய அணி துணைச் செயலாளர் அம்பவாணன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய துணை செயலாளர் குருமாணிக்க ஐயா, தென் குவளை வேலி பால தண்டாயுதபாணி மற்றும் கிளை செயலாளர்கள் சுப்பிரமணியன், இளங்கோவன், குமார், ஆர்.சி. பாண்டியன், கருப்பையன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.