காரிமங்கலம் கெரகோடஅள்ளி ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் கிழக்கு ஒன்றிய, பேரூர் கழக அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்,
கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி சிறப்புரை முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள், கோவிந்தசாமி, சம்பத்குமார், விவசாய பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன்,
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் வேளாண்மை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பேசியவர்,அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, திமுக அரசு புறக்கணித்து மக்களை வஞ்சித்து வருவதாகவும், மீண்டும் 2026ம் ஆண்டு எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு அமைந்தவுடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காரிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், டாக்டர் அசோகன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், முன்னாள் சேர்மேன் மாணிக்கம், கோபால்,
மாவட்ட கவுன்சிலர் காவேரி, கவிதாசரவணன், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், கோபால், சிவபிரகாசம், பழனி, வக்கில் செந்தில், கே.வி ரங்கநாதன், நகர செயலாளர்கள் காந்தி, ராஜா, கோவிந்தன், வக்கில் .பாரதி, ஒன்றிய அவைதலைவர் கோவிந்தசாமி, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் சந்திரன், குட்டூர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஜிம் முருகன், தனபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி,மகாலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி,
தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் சாந்தகுமார், கோவிந்தசாமி, மாரிமுத்து, கெளதம், பாலு, மஞ்சு, கதிர், அசோக், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *