அரியலூர் இரயில் நிலையம் முன்புள்ள ஆட்டோ ஸ்டாண்ட்டிற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ப.பிரபாகர்,மோட்டார் வாகன ஆய்வாளர் நா சரவணபவன் ஆகியோர் நேரில் சென்று, அங்குள்ளஆட்டோ ஒட்டுநர்களிடம் ரயில் பயணிகளிடம் அரசு நிர்ணயம் செய்துள்ள முறையான ஆட்டோ கட்டணம் வசூலிக்க வேண்டும், ஆட்டோ ஒட்டுநர் உரிமத்துடன் சீருடை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி, மேலும் அவர்களிடம் எஃப்.சி , வாகன காப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா ? என ஆய்வு மேற்கொண்டனர் . இந் நிகழ்வின் போது போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்