தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடைகள், வாருகால் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன்,உதவி பொறியாளர் ராம் மோகன், மேற்பார்வையார் காந்தி, சுகாதார ஆய்வாளர் கைலாசம்,கருப்பசாமி, நகர் மன்ற உறுப்பினர் அலமேலு, திமுக தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.