கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ரூ. 2.62 கோடி கடன் மற்றும் மானியம் தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக 560 பயனாளிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தனியார் திருமண மஹாலில் தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
கல்யாணசுந்தரம் எம்பி முன்னிலை வகித்தார். விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் 560 பயனாளிகளுக்கு கடன்கள் மற்றும் மானியங்களை வழங்கினார்.
தாட்கோ கடன் 266 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 43 லட்சம் மதிப்பிலும் 22 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 267 பேர்களுக்கு ஒரு கோடியே 2 லட்சம் மதிப்பிலும் மாற்றுத்திறனாளி கடன் 9 நபர்களுக்கு 7 லட்சத்து 38 ஆயிரம், பண்ணை சாரா கடன் 18 பயனாளிகளுக்கு ஒன்பது லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலும் மொத்தம் 2 கோடியே 62 லட்சம் மதிப்பில் 560 பயனாளிகளுக்கு கடன்களை வழங்கினார்.