கும்பகோணம் அருகே பாபநாசம் அரசு மருத்துவமனையில் தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு ….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே
பாபநாசம் வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பாபநாசம் அரசு மருத்துவமனையில் கட்டு கட்டும் இடம்,அவசர சிகிச்சை பிரிவு,ஊசி போடும் இடம்,மருந்தகம் ,வெளி நோயாளிகள் பிரிவு, மக்களைத் தேடி மருத்துவ பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ,ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பாபநாசம் காவல் நிலையத்தில் கோப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும்,பாபநாசம் அரசினர் மாணவர் விடுதி, பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சி, பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி, இருக்கை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கும்பகோணம் சார் ஆட்சியர் செல்வி ஹிருத்யா எஸ்.விஜயன் பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் செல்வகுமார், குடும்ப நல சுகாதாரத்துறை துணை இயக்குனர் அன்பழகன், பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பாபநாசம் பேரூர் திமுக செயலாளர் கபிலன் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *