தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், அக்- 20. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தீபாவளி பண்டிகையொட்டி தட்டுப்பாடின்றி பருப்பு கிடைத்திட தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மிக அத்தியாவசிய பொருளான துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. சிலருக்கு பருப்பு கிடைக்கிறது, பலருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு மாற்று தேதியிட்டு பருப்பு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பருப்பு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குறைபாடுகள் உள்ளதாலும், குளறுபடிகள் இருந்ததாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தினால் கருப்பு பட்டியயில் (Block list) வைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தற்போது துவரம் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி அளித்திருப்பது உணவுத்துறை மற்றும் தமிழக அரசின் மீது நம்பிக்கையற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது கட்டணத்துக்குரியது.
ஊழல் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும், இனி ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடின்றி தொடர்ந்து கிடைக்க தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
தஞ்சை மேற்கு மாவட்ட மு.செயலாளர் அ.ரெ.முகிலன்,மாநகர மு.செயலாளர் தஞ்சை தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இடது சாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், தமிழக மக்கள் புரட்சி கழகம் தலைவர் அரங்க.குணசேகரன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில நிர்வாகிகள் தை.சேகர், சாக்கோட்டைராஜா, கு.ரோஸ்லின், திருவாரூர் மாவட்ட செயலாளர் செருகை சுரேசு, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல நகர ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தஞ்சை மைய மாவட்ட செயலாளர் எஸ் .ஏ.பி.சேவியர் நன்றி கூறினார்.