திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கொடை குறிஞ்சி லைன்ஸ் கிளப் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொடைக்கானல் சுகாதாரம் காப்போம் பிரச்சாரத்துடன் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் மட்டத்தை தடுக்கும் பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் லைன்ஸ் கிளபின் தலைவர்.ராஜேஸ் கண்ணா, செயலாளர்.ஜான்தாமஸ், பொருளாளர்.அலெக்ஸ் மற்றும் பட்டய தலைவர்.தண்டபாணி ஆகியோர் தலைமையிலான இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர். கென்னடி செய்திருந்தார். இந்நிகழ்ச்சி பொது மக்களிடையே வரவேற்க வேண்டிய நிகழ்ச்சி என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.