யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக_185 வது வார மரக்கன்றுகள் நடும் விழா மதுரை புதூரில் உள்ள சிறப்பு குழந்தைகள் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார்.
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு வரவேற்றார். ஆலோசகர் ராகேஷ் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக துணை மேயர் நாகராஜன், சந்திரசேகர், கல்யாணி, வழிகாட்டி மணிகண்டன், அப்துல் கலாம் அமைப்பின் நிறுவனர் செந்தில், பசுமைச் சாம்பியன் அசோக்குமார், முராபாரதி, உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர் அமைப்பின் தலைவர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மரங்களின் பயன்பாடுகள், சுற்றுச்சூழல், சீரற்ற காலநிலை, மழைநீர் ஆகியன குறித்து துணை மேயர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவி நலினா அப்துல் கலாம் வேடமணிந்து அப்துல் கலாம் பொன்மொழிகள் கூறினார். மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி புத்தாடைகளை துணை மேயர் நாகராஜன் வழங்கினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக “மாற்றம் தேடி” நல சமூக அறக்கட்டளைக்கு ‘சேவைகளின் சிகரம் விருது’ வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு தேவையான நெல்லி, மகிழம், வேம்பு , மந்தாரை, புங்கை மரங்கள் மற்றும் வலைகளை சிலம்பம் மாஸ்டர் பாண்டி வழங்கினார். விழாவில் ஆலோசகர்கள் சிலம்ப மாஸ்டர் பரமேஸ்வரன், சமூக ஆர்வலர் பாலமுருகன், சாய் சதீஷ், கார்த்திகேசன், சதீஷ் குமார், முருகானந்தம், கமல் , மணிகண்டன், தொழிலதிபர் ஞான சிகாமணி, ரமேஷ், ஸ்டெல்லா மேரி, ஷியாமளா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி முத்தழகி நன்றி கூறினார்.