கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி ….
திருப்பனந்தாள் போலீசார் விசாரணை….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பட்டம் பழைய தெருவை சேர்ந்த ராமசாமி மகன் பிரபாகரன் வயது 42 பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் திருப்பனந்தாள் கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பிரபாகரன் மண்ணியாற்று
ஆற்றின் பாலத்தில் அமர்ந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பிரபாகர் ஆற்றில் தவறி கீழே விழுந்து இறந்து விட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் படி திருப்பனந்தாள் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.