பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என
அரியலூரில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் .

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்
என்று பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.அரியலூர் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் மற்றும் முப்பெரும் விழாவில் நிறை வேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிட அனுமதிக்க வேண்டும்.
அமைச்சுப் பணியாளர்களுக்கு துணை இயக்குநர், இணை இயக்குநர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். நீதிமன்ற வழக்குகளை கையாள சட்ட அலுவலர் பணியிடம் மாவட்டந்தோறும் உருவாக்கப்பட வேண்டும். வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத்தலைவர்(பொ)மு.பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில பிரசாரசெயலாளர்துரை.சரவணன், கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் அ.அறிவழகன், வெங்கடாசலம், மூத்த ஆலோசகர் இரா.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் த.ல.சீனிவாசன் கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கியும், மாநில பொதுச் செயலாளர்சு.ஹரிபாஸ்கர், பணி ஓய்வு பெற்ற சங்க நிர்வாகி களை கௌரவித்தும், சங்கத்தின் மாநில பொருளாளர் மா.அருண் குமார், பதிவு உயர்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்தும் சிறப்புரையாற்றினர். முன்னதாக
மாவட்ட அமைப்பு செயலாளர் ச.இராசிம்மன் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கி.ரீகன் கிரிஸ்டோபர் நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரச்சாரசெயலாளர்ரெ.ரஜினி,மாநில செயற்குழு உறுப்பினர் கி.செந்தமிழ்,மாவட்ட துணைத் தலைவர் மு.விநாயகம், மாவட்ட இணைச்செயலாளர் ஜி. வீரமணி,கல்வி மாவட்ட நிர்வாகி கே கந்தசாமி,மாவட்ட இணைச் செயலாளர் பி.செல்லையன், மாவட்ட இணை செயலாளர் ஆர் வெங்கடேஸ்வரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந. கோவிந்தராசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் நா பரிமளம்,கல்வி மாவட்ட நிர்வாகி அ.கிருஷ்ண மூர்த்தி, மாநில துணைத்தலைவர் சு.சரவணசாமி,தலைமையிடத்து நா. சபரிநாதன்,மாநில அமைப்பு செயலாளர்எம்என்கந்தசாமி,
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கி.ஜெயமுகுந்தன்,நேர்முக உதவியாளர் அ.சந்திரபோஸ் , கண்காணிப்பாளர் அ..செல்வ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *