திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் பகுதியில் பாய்ச்சல் காவல்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட ஈச்சர் வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்
அப்போது ஈச்சர் வேனில் சுமார் 700 கிலோ குட்கா மூட்டை மூட்டைகளாக இருந்ததை போலீசார் பறிமுதல் செய்து வேன் ஒட்டுநர் கெளசிக் மற்றும் கிளினர் அக்சய் ஆகிய இருவரை கைது செய்து குட்கா ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்தனர்
குட்கா எங்கிருந்து வருகிறது யாருக்கு கொண்டு செல்கின்றார்கள் எனவும் போலீசார் இருவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
செங்கம் செய்தியாளர் கு.சக்திவேல்