நெமிலியில் மின் கட்டண உயர்வு கண்டித்து SDPI கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் :-
செய்தியாளர் வெங்கடேசன்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI கட்சியினர் மின் கட்டண உயர்வு மற்றும் மாதாந்திர கணக்கீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI கட்சி சார்பில் நெமிலி பேரூராட்சி நெமிலி நகரத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தக்கோலம்.தமீம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
உடன் SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் மற்றும் அரக்கோணம் தொகுதி தலைவர் அமீன் மற்றும் தொகுதி செயலாளர் சித்திக் மற்றும் தொகுதி இணைச் செயலாளர் சான் பாஷா மற்றும் தொகுதி நகர பேரூர் கிளை நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.