விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில் இராஜபாளையம் பிஎஸ்.குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் தனது 95,96,97,98,99 வது மாத ஊதியத்திலிருந்து (5,25,000) கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளரான தூய்மை பணியாளர்களை வாழ்த்தி பாராட்டி கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் 2020ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5வது முறையாக இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களான 521 ஆண்களுக்கு வேஷ்டி சட்டையும் இனிப்பும் 490 பெண்களுக்கு சேலைகளும் இனிப்புகளும் என மொத்தம் 1011 நபர்களுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன் ஒன்றிய சேர்மன் ஜி.சிங்கராஜ் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கம்புலி அண்ணாவி நகர துணை சேர்மன் கல்பனா மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வார்டு நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கழக முன்னோடிகள் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.