வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் நிர்வாக செலவினம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர் தலைமை வகித்தார்.ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிவகுமார் வாசித்தார். ஒன்றிய குழு கூட்டத்தில் கடந்த ஆறாம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்த 15 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிர்வாக செலவினம் தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர் பேசுகையில், ஒவ்வொரு ஒன்றிய குழு உறுப்பினர்களும் தங்களது பகுதியில் சுமார் ஆறு லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக பணிகளை தேர்வு செய்து தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரபாகரன், தாமரைச்செல்வம், ரேணுகா, ரசூல் நஸ்ரின், காந்திமதி, விமலா, கவிதா, சீதாலட்சுமி, மாலதி உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிரைவில் துறை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் சிங்காரவேலு நன்றி கூறினார்.