திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 11- வது வார்டில் உள்ள கீழ அக்ரஹாரம் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

இதனை அடுத்து பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித் தமிழ்மாறன்,11-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி பாஸ்கர் பெரும் முயற்சியால் அப்பகுதியில் தேங்கும் மழை நீர் வெளியேறும் விதமாக 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் சுமார் 74 மீட்டர் நீளத்திற்கு சுமார் ரூபாய் 6.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *