காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி .:-

செய்தியாளர் வெங்கடேசன்

கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்னுமிடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (21.10.2024) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல் துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தலைமையில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி பின் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.வீரவணக்கம் நாளை முன்னிட்டு போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திருமால் (இராணிப்பேட்டை உட்கோட்டம்), வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்), வெங்கடகிருஷ்ணன் (IUCAW), ராமச்சந்திரன் (DCRB), ரமேஷ் ராஜ் (DCB) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *