வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வசவப்பபுரம் குட்டைக்கால் குளம், சென்னல்பட்டி முக்கவர் கால்வாய் மற்றும் பாலம் (நாடாளுமன்ற உறுப்பினர் நிதி), மருதூர் அணைக்கட்டு, வல்லநாடு – மணக்கரை கீழக்கால் கண்மாய், ஆழ்வார்கற்குளம் – தோழப்பன்பண்ணை கீழக்கால் கண்மாய், ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம், கோரம்பள்ளம் கண்மாய், அத்திமரப்பட்டி பாலம் ஆகியவற்றில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம் ஆய்வின் போது, கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் தரமற்று இருப்பதைக் கண்டறிந்த கனிமொழி கருணாநிதி, கற்களின் தரத்தை உறுதி செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில், மக்கள் நலத்திட்டங்களுக்குத் தரமற்ற கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பியதுடன், அவரை கண்டிக்கவும் செய்தார்.

மேலும், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில கற்களை ஆய்வுக்கு உட்படுத்தும் நோக்கில் தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்திற்குக் கனிமொழி கருணாநிதி எடுத்து சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *