கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டமும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையும் இணைந்து நடத்திய “சைபர் கிரைம்” தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி .
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை(22.
10.2024 )அன்று நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் வணிக கணினி பயன்பாட்டியலின் துறை தலைவருமான முனைவர் மா. ஜெகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், தகவல் தொழிநுட்ப சேவைகளை திருடுவது ,
தகவல்களை அழிப்பது,
இணயத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களை திருடுவது,
மற்றவர்களின் தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது
சட்டப்பிரிவு 67- இன் கீழ் சைபர் கிரைம் தண்டனைக்குரிய குற்றமாக காவல்துறையினரால் பதிவு செய்யப்படுகிறது எனும் தகவலையும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து பேசினார். கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரான திரு S.நமச்சிவாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில்,
சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது ,
மின்னஞ்சல் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் கொலை மிரட்டல்கள்,
இணையவழி பொருளாதார
குற்றங்கள்,
மற்றவர்களின் மின்னஞ்சல் மற்றும் சோசியல் நெட்வொர்கிங் கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது. காவல் உதவி செயலியை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தல் வேண்டும் . புகார் தெரிவிப்பதற்கான 1930 என்ற தொலைபேசி எண்ணையும், மாணவ மாணவியர்களுக்கு தெரியப்படுத்தினார். மேலும் மாணவர்கள் தேனீ போல சுறுசுறுப்புடனும் நன்கு படித்து ,நல்ல வேலைக்கு சென்று பெற்றோர்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார். மற்றொரு சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி பி .கவிதா அவர்கள் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்களான தாவரவியல் உதவி பேராசிரியர் திரு . இரா இராமமூர்த்தியும் வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர் கே .இராமமூர்த்தியும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை வேதியியல் துறையின் தலைவர் இரா. சிவகுமார் அவர்கள் தொகுத்து வழங்கினார் . விழாவின் நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இரா சரவணகுமார் அவர்கள் நன்றி கூற, விழா இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவு பெற்றது.