மதுரையில் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது….
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும் பொன்னில் வரும் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடப்பது வழக்கம். இதையொட்டி வழக்கமாக அக்டோபர் 27ம் தேதி தேவர் சிலைக்கு பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மின் விளக்கு அலங்காரம் அமைக்கப்ப டும். இந்நிலையில் இந்த வருடம் தேவர் சிலைக்கு அலங்கார மின் விளக்குகள் அமைக்க, பாதுகாப்பு காரணங்கள் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வில்லை என தெரிகிறது.
இதையடுத்து மின் விளக்குள் அலங்காரம் செய்ய அனுமதி கோரி, பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கதிரவன் தலைமையில், நேற்று தேவர் சிலை அருகே திடீர் சாலை மறியலுடன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கதிரவன் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.