தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மத்திய மாவட்டம், தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மேலவஸ்தாச்சாவடி தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் பர்கூர் அருணாசலம் பேசும் போது :- எடப்பாடியாரை போல ஒரு சிம்பிளான தலைவரை யாரும் பார்க்க முடியாது
அவர்தான் நம்முடைய தலைவர். நான்கு ஆண்டு காலம் நல்ல ஆட்சியை நடத்தியதால் தான் எல்லா மக்களுக்கும் எடப்பாடி யாரை தெரிகிறது. பெண்களுக்கு பொங்கலுக்கு 2500 ரூபாயை கொடுத்தவர் தான் எடப்பாடியார். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் பொங்கலுக்கு பச்சரிசி, வெல்லம், முழுகரும்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கொடுத்தனர்.
ஆனால் திமுக அரசோ அரை கரும்பை கொடுத்து வெள்ளம் கொடுத்தது வெள்ளத்தை வாங்கி செல்லும்போது அது ஒளிவி கொண்டே போகிறது. அதனால் தான் மக்கள் இன்னும் எடப்பாடியாரை அந்த தலைவர் வரவேண்டும் என்று விரும்புகின்றனர். தஞ்சையை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்த தலைவர் எடப்பாடிரயார் அவர்தான் தஞ்சையை வளமானதாக ஆக்குவார் அப்படிப்பட்ட தலைவரை தான் மக்கள் விரும்புகிறார்கள்.
திமுக இதற்கு மேல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. நமது அதிமுக கட்சியின் 53 வது ஆண்டு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது, 55 வது ஆண்டில் 2026 இல் எடப்பாடி ஆரின் நமது கட்சியின் ஆட்சி தான் நடைபெறும் என்று கூறினார்.
முன்னதாக ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அனைவரையும் வரவேற்றார். மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், முன்னிலையாக கொள்கை பரப்புச் செயலாளர் துரை திருஞானம், கழக விவசாய பிரிவு இணை செயலாளர் ராஜமாணிக்கம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் துரை வீரண்ணன், அம்மா பேரவை இணை செயலாளர் அறிவுரைநம்பி, விவசாய பிரிவு துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் அன்புச்செல்வன்மற்றும் மாவட்ட ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக செயல்வீரர்கள் கலந்து கொண்ட கூட்டம் நிறைவாக சூரியம்பட்டி முருகையன் நன்றி கூறினார்