தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட, பாளை ரோட்டிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை திறக்கப்படவுள்ள நிலையில்,திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிங்க் பூங்காவில் சிறப்பு அம்சமாக சூரிய ஒளியில் இயங்கக்கூடிய குளிர்சாதன உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சிக் கூடம், இறகு பந்து மைதானம் உள்ளிட்ட பலர் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆய்வின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.