போடிநாயக்கனூர் சி.பி.ஏ. என்ற ஏல விவசாயிகள் பொன்விழா ஆண்டையொட்டி பனை விதைகள் நடும் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள சி பி ஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கல்லூரி தேனி மாவட்டம் மற்றும் போடிநாயக்கனூர் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் நன்மதிப்பை பெற்ற மாபெரும் கல்லூரி ஆன இந்த கல்லூரியில் பனை மரங்கள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

இந்த விழாவிற்கு கல்லூரியின் எஸ்
வி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார் கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் உப தலைவர் எஸ் ராமநாதன் நிர்வாக குழு உறுப்பினர் ஆர் சி பிரபு கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் .சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த விழாவில் கல்லூரியின் வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக 150 பனை விதைகள் மற்றும் 100 பலா மர விதைகள் நடப்பட்டன மேலும் விழாவில் கல்லூரியின் மூலிகைத் தோட்டம் புதியதாக திறக்கப்பட்டது தேனி மாவட்ட அளவில் பனை விதை சேகரிப்பில் முதலிடம் பெற்ற பனை முருகன் சுமார் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை கல்லூரி நிர்வாகத்திடம் இலவசமாக ஒப்படைத்து சிறப்பு செய்தார் இந்த பசுமையான நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்தில் பனை மரம் மற்றும் புதியதாக மூலிகை தோட்டம் திறந்து வைப்பு போன்ற நிகழ்ச்சிகள் முயற்சியானது பல்லுயிர் பெரு க்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது மேலும் கல்லூரி மாணவர்களிடையே ‌ தற்பொழுது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பெருகிவரும் மக்கள் தொகை அதிகரிப்பு குடியிருப்புகள் அதிகரிப்பு போன்ற நிலைகளை சமாளிக்க மரங்களை நடுதல் அதனை பராமரித்தல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடையே வளர்ப்பது மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் பசுமையான நடைமுறைகளுக்கான அதிகரிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்ததாக கல்லூரியின் மாணவ மாணவிகள் பெருமிதம் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சி
பழனிவேல் ராஜன் முனைவர் ஜி. கருப்புச்சாமி முனைவர் ஏ ஆர் மணிகண்டன் முனைவர் வி.விமலா முனைவர் டி. ராமலட்சுமி கல்லூரி பேராசிரியர் பி சுகுணா செல்வராணி உள்பட தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் எஸ் ராமலிங்கம் ஆகியோர் இந்த பசுமையான பனைமர நடும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெகு சிறப்பாக செய்திருந்தனர் கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *