கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவினாசி பாளையம் பகுதியில் அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வழியாக தாராபுரம் முதல் கன்னியாகுமரி வரை செல்கிறது
இந்நிலையில் அவிநாசியில் இருந்து அவிநாசி பாளையம் திருப்பூர் மாநகர் வழியாக 14 சிக்னல்களை கடந்து 32 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது இந்த நிலையில் வேலம்பட்டி என்ற பகுதியில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான சுங்கச்சாவடியானது அமைக்கப்பட்டது
மேலும் அதற்கு பல்வேறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுங்கச்சாவடி செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது
இந்த நிலையில் சுங்கச்சாவடியானது செயல்பாட்டுக்கு வரப்போவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சுங்கச்சாவடி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் கூறுகையில் சுங்கச்சாவடி திறப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மேலும் பல்வேறு விதமான சலுகைகள் குறிப்பாக லோக்கல் பாஸ் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத் தொகையில் தள்ளுபடி போன்றவை இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.