கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே தேனாமபடுகையில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடத்தை கும்பகோணம் எம்எல்ஏ திறந்து வைத்தார்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேனாம்படுகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க .அன்பழகன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை பெருந்தலைவர் கணேசன் , கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் , ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சாமிநாதன், வட்டார கல்வி அலுவலர் மதியழகன் பள்ளி தலைமை ஆசிரியர் நளினாதேவி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.