இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழகத் தேர்வில் முதலிடம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வில் கடந்த கல்வியாண்டில் மூன்று பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி முதுகலை வரலாறு மாணவி இந்துஜா, முதுகலை வணிகவியல் மாணவி காயத்ரி மற்றும் இளங்கலைக் கணிதவியல் மாணவி பிரகதீஸ்வரி ஆகியோருக்கு பல்கலைக்கழகத் தேர்வில் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக ஆளுநர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இளங்கலைக் கணிதவியல் பாடப் பிரிவை சேர்ந்த பாண்டி பிரியா, மாலினி மற்றும் நித்திய தர்ஷினி, இளங்கலை வணிகவியல் பிரிவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, இளங்கலை இயற்பியல் பிரிவைச் சேர்ந்த ஜெபக்கனி, வணிக நிர்வாகவியல் பிரிவு சேர்ந்த சுபலட்சுமி, நீலவேணி ஆகியோரும் அடுத்த தர வரிசை பட்டியலில் இடம் பெற்று தமிழக ஆளுநர் அவர்களிடம் சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளைக் கல்லூரி ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் கே.ஜி. பிரகாஷ், கல்லூரி முதல்வர் முனைவர் சி. ராமகிருஷ்ணன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். ராமராஜ், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்கள்.