மரபை மீறிய ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்து விரட்டியவர் நம் முதல்வர் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பொதுக் கூட்டத்தில் திருச்சி சிவா எம். பி பேச்சு ….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் கடைவீதியில் திமுக பவள விழா மற்றும் உயர்கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற கோவி செழியனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னால் எம். பி ராமலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், திருச்சி சிவா எம் பி ஆகியோர் பேசினர்.
திருச்சி சிவா எம்பி பேசுகையில், தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் மரபுப் படி கொடுத்ததை பேசாமல் அதிலிருந்து டாக்டர் அம்பேத்கார் பெரியார் அண்ணா போன்றவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு அவர் சுருக்கி பேசினார். அங்கு முதல்வராக இருந்தது தளபதி ஸ்டாலின் அல்லவா. அவர் அமைதியாக எழுந்து நின்று சபையில் சபாநாயகர் பேசியது மட்டும் அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் மற்றவை இடம்பெறக் கூடாது என தெரிவித்தார். ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது முதல்வர் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். ஏதோ பேசுகிறார் என்று சும்மா விடக்கூடிய கட்சி அல்ல நாம். ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்து ஓட விரட்டியவர் நம் முதல்வர். சமீபத்தில் பிரச்சார பாரதி விழாவில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரியை விட்டுவிட்டு பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது பல்வேறு தலைவர்களும் கண்டன குரல் எழுப்பினர் மறுநாள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரச்சார பாரதி நிறுவனத்திலிருந்து பாடியவர்கள் தவறுதலாக அந்த வரியை விட்டு விட்டார்கள் இதில் ஆளுநருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை எங்களை மன்னித்து விடுங்கள் என்று கேட்டிருந்தனர். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனத்திடம் இருந்து மன்னிப்பு கேட்டு வந்த கடிதம். அதுதான் இந்த மண் இவ்வாறு அவர் பேசினார்.

பேச்சு:

திருச்சி சிவா -எம் பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *