திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியாம் உலக சுற்றுலா தளமான கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு மகிழ தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக,ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு கொடைக்கானலில் இருந்து பூம்பாறை வழியாக பழமையான குழந்தை வேலப்பர் கோவில் , பழனி மலை காட்சி, செம்மறி ஆட்டு பன்னை, கூக்கால் ஏரி, மன்னவனூர் சுற்றுலா சூழலை காண செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது

இதனால் இவ்வழியே வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் .இதனை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், போர்கால அடிப்படையில் விரைவில் சாலைகளை சீரமைக்க தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் முதல் கொடைக்கானல் பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *