கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், 7 நபர்களுக்கு ஒரு லட்சத்து 5ஆயிரம் மதிப்பீட்டில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியங்களை சேர்ந்த சாலையோர பகுதிகளில் வியாபாரம் செய்யும் 7 ஏழை எளிய வியாபாரிகளுக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்தும் வகையில் 50 சதவீத மானியத்தில் ரூபாய் 15,000 வீதம் மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மதிப்பீட்டில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் கோ.க.அண்ணாதுரை, தோட்டக்கலை உதவி இயக்குனர் அனுசுயா, மற்றும் கழக நிர்வாகிகளும், தோட்டக்கலைத்துறை அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்….