ஹூப்ளில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலுக்கு ராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே, தென் மேற்கு ரயில்வே மண்டலங்களில் பெங்களூருவிலிருந்து ராஜபாளையம் வழியாக ரயில்களை இயக்க ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
அதன் பலனாக ஹுப்ளியில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை ஒரு தீபாவளி சிறப்புரயில் அறிவிக்கப்பட்டது.
அந்த ரயில் ராஜபாளையம் வருகை தந்த போது
ராஜபாளையம் ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பாக சிறப்புவண்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் பயணங்கள் சங்கத் தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில் நிலைய ஊழியர்கள், ரயில் சிப்பந்திகளுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டன. ரயிலுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.