திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் சர்வதேச மாணவர் தினத்தை முன்னிட்டு ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்,பேனா, பென்சில் ஆகியவை “வந்தை டைம்ஸ்” சார்பில் வழங்கப் பட்டது.
இந்த நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன் தலைமை தாங்கினார். மேல் நெமிலி தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி தாழம்பள்ளம் தலைமை ஆசிரியர் க.வாசு, கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அரிமா சங்கத் தலைவர் இரா.சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தக தொகுப்பினை வழங்கி மாணவர்களிடையே எழுச்சியுரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து துறை சார்ந்தோர்க்கு விருதுகள் வழங்கப்பட்டன. புலவர் இரகுபதி, தலைமை ஆசிரியர்கள் அருள் ஜோதி, சக்கரவர்த்தி, தலைமை செவிலியர் ஸ்டெல்லா ஆகியோர் சிறந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருதினை பெற்றனர்.
நிகழ்வை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தொகுத்து வழங்கினார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், திரைப்பட உதவி இயக்குனர் பிரேம், கவிஞர்கள் முகம்மது அப்துல்லா கேப்டன் பிரபாகரன் வந்தை குமரன், நூலகர் ஜா.தமீம், ஆசிரியர்கள் சதானந்தன், ரகுபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி