சின்னமனூர் அருகே பனை விதைகள் நடும் விழா தேனி மாவட்டம் சின்னமனூர் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை மற்றும் கம்பம் தீர்த்தம் டிரஸ்ட் சார்பாக மேலச் சி ந்தலைச்சேரி பிரபஞ்சம் பல்லுயிர் சோலையில் பசுமையை போற்றும் விதமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த பசுமையான விழாவிற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்
சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மற்றும் வனத்துறையைச் சேர்ந்த பிரியங்கா முன்னிலை வகித்தார். இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார் பனை விதைகள் நடுதல் மற்றும் பனை விதைகள் நடுவதால் ஏற்படும் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்
அக்ரி டிவிஷன் பொது மேலாளர் சுருளியப்பன் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் பொதுநல அமைப்பினர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் தீர்த்தம் அறக்கட்டளை அறங்காவலர் உதயகுமார் நன்றி கூறினார்