செங்குன்றம் செய்தியாளர்
புழல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகளுடன் புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவன் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தீபாவளி திருநாளை கொண்டாடினர் .
புழல் போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகள் அனைவரையும் காவல் நிலையம் வரவழைத்து அவர்களுக்கு தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடவும் பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அறிவுரை கூறி இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை வெடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பாய்ஸ் கிளப் மாணவ மாணவியுடன் காவல்துறையினர் இணைந்து கொண்டாடிய இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அனைவரும் பட்டாசுகள் வெடித்த மகிழ்ந்தனர் பின்னர் வீட்டிற்கு சென்று பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அருகில் உள்ளோருக்கு அறிவுரை வழங்குமாறு கூறி அவர்களுக்கு பட்டாசுகளையும் இனிப்புகளையும் போலீசார் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் போலீஸார்கள் மற்றும் போலீஸ் பாய்ஸ் கிளப் நிர்வாகிகள் ராஜன் ,விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.