பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோடை. ஆனந்த் தலைமையில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி மூஞ்சிகல்லில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறுசுவை உணவும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டது.இதில்
மாநில தொழிற்சங்க தலைவர்.நாகேந்திரன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பெஞ்சமின், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரேம், கொடைக்கானல் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய மகளிர் அணி தலைவி சுசீலா மேரி , கொடைக்கானல் நகரத் தலைவர் வசீகரன், நகரச் செயலாளர் சக்தி, நகர மகளிர் அணி தலைவி யூக்னேஸ்வரி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
