உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் இரண்டாம் தேதியை சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைபிடிக்கின்றனர். இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டங்களில் மலரஞ்சலி செலுத்துவார்கள் அதன்படி
இந்தாண்டு தென்காசி மாவட்டம் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்திற்கு பாத்தியப்பட்ட ஆர்சி கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகளில் இருக்கும் செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டு புதிதாக கல்லறைகளுக்கு வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு பின்னர் தங்கள் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழக்கம் அதன்படி நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக அதிகாலையில் நீத்தார் நினைவு நாளை போற்றும் வகையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இத் திருப்பலியினை பாளையஞ் செட்டிகுளம் பங்குத்தந்தை அருட்பணி ஜோமிக்ஸ் அடிகளார் மற்றும்தென்காசி மறை வட்ட அதிபரும் பங்கு தந்தைமான அருள் முனைவர் போஸ்கோ குணசீலன் அடிகளார் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.தொடர்ந்து அம்பை ரோட்டில் அமைந்துள்ள ஆர். சி. கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகளை வட்டார அதிபரும் பங்குத்தந்தைமான அருள் முனைவர் போஸ்கோ குணசீலன் அடிகளார், மற்றும் உதவி பங்கு தந்தை மிக்கேல் மகேஷ் அடிகளார் இணைந்து சிறப்பு வழிபாடு நடத்தி கல்லறைகளை மந்திரித்தனர். இந்நிகழ்வில் திரளான இறைமக்கள் பலர் கலந்து கொண்டனர்.