ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2 ம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர்.
இன்றைய நாளில் தங்கள் மூதாதையர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என இறந்து போன அனைவரது கல்லறைகளுக்கும் சென்று அஞ்சலி செலுத்துகின்ற நாளாக கடை பிடிக்கின்றனர்.
முன்னதாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கல்லறைகளை சுத்தம் செய்தல், வர்ணம் பூசுதல் என்ற பணிகளை செய்து இன்றைய நாளிலே அவர்கள் கல்லறைகளுக்கு சென்று அவர்கள் விரும்பிய உணவுகளை படைப்பது கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல் செய்வது கல்லறைகளிலே திருப்பலிகள் நடத்தப்பட்டு அருட்தந்தையர்
களால் மந்திரிக்கப்படுகிறது.
இவ்வாறாக ஆண்டு தோறும் தவறாமல் தங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் பெற்றோர் மூதாதையர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கடைபிடிக்கும் கிறிஸ்தவர்கள் இன்றைய நாளிலே கல்லறை திருநாளை நிறைவு செய்கிறார்கள்.