கோவை வடவள்ளி சக்சஸ் தீபாவளி பட்டாசு விற்பனை கடையில் அறிவித்த சிறப்பு பரிசுகளுக்கான குலுக்கல் நடைபெற்றது..

இதில் ஸ்கூட்டர்,கியர் சைக்கிள்,மிக்ஸி,
மற்றும் வெள்ளி நாணயங்களை பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க பெற்று சென்றனர்..

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சக்சஸ் பட்டாசு கடையில் இந்த வருட தீபாவளி பட்டாசு வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அறவிக்கப்பட்டிருந்தன..

குறிப்பாக 2500 ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஜூபிடர் ஸ்கூட்டர்,,சைக்கிள்,
மிக்ஸி,வெள்ளி நாணயங்கள் என சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன..

இந்நிலையில் தீபாவளி முடிந்த நிலையில் பரிசு கூப்பன்களை பெற்று சென்ற பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது..

சக்சஸ் பட்டாசு கடை உரிமையாளர்கள் சதீஷ்,ஆறுச்சாமி,
பவித்ரன்,விக்கி,
மகேஷ்,அருள்
ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
சிறப்பு விருந்தினர்களாக வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் ப்ராங்க்ளின்,
ஆர்.எஸ்.புரம் ரத்தின சபாபதி கிளப் தலைவர் கருமுத்து தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் முதல் முதல் பரிசாக ஜூபிடர் ஸ்கூட்டரை தட்டி சென்றார்..

தொடர்ந்து நடைபெற்ற குலுக்கலில் சைக்கிள்,மிக்ஸி,வெள்ளி நாணயங்கள் போன்ற பரிசுகளை பொதுமக்கள் மகிழ்ச்சியாக பெற்று சென்றனர்.

முதல் பரிசாக ஸ்கூட்டர் பரிசு பெற்ற இளைஞர் மகிழ்ச்சியுடன் ஸ்கூட்டரை ஓட்டி சென்றார்..

இது குறித்து பட்டாசு கடை உரிமையாளர்கள் கூறுகையில்,
நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு விற்பனை செய்து வருவதாகவும்,
முழுக்க முழுக்க லாப நோக்கம் இல்லாமல் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி இந்த பட்டாசு கடையை நடத்தியதாக தெரிவித்தனர்..

எனவே இங்கு பட்டாசு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பரிசுகளை வழங்கி வருவதாகவும், தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *