கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி .ஆர். லோகநாதன் பிறந்த நாள் விழா……
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி. ஆர் லோகநாதன் பிறந்தநாள் விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம். மற்றும் காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மேலும் மாற்றுக் கட்சியை சேர்ந்த விஜயகுமார் அனைவரின் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இணைந்தார்.
அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாவட்ட தலைவராக பொறுப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.