விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்காப்பேர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ள குளம் பகுதியில் ஐந்து பெண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் வனத்துறை வன சரக அலுவலர் கமல கண்ணனிடம் தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட வனவர் சுகுமார் மற்றும் வன காப்பாளர்கள் ராஜசேகர் ராமநாதன் செந்தில் மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதனையடுத்து இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி கால்நடை மருத்துவ ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் செல்வகுமார் ஆகியோர் இறந்துபோன மயில்களை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

மேலும் வனத்துறை அதிகாரிகள் மயில்களுக்கு விஷம் வைத்து யாரேனும் கொன்றார்களா என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து விழுப்புரம் மாவட்ட வனத்துறை ஆய்வாளர் சுகுமார் கூறுகையில் ஒரே இடத்தில் ஐந்து பெண் மயில்கள் இறந்து கிடப்பது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் இறந்துபோன மயில்களின் உடல் உறுப்புகள் வண்டலூரில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் விவசாயிகளின் பயிர் நிலங்களை சேதப்படுத்தும் முள்ளம்பன்றி காட்டு பன்றிகள் மயில் போன்ற விலங்குகளால் ஏற்படும் இழப்புகளை வனத்துறை அலுவலகத்துக்கு தெரிவித்தால் வனத்துறை சார்பில் அதற்கான நஷ்டஈடு தொகையினை வழங்கப்படும் எனவே பொதுமக்கள் யாரும் வனவிலங்குகளுக்கு உயிர்கொள்ளி மருந்துகள் வைப்பது மற்றும் மின்சார வேலி அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *