கூடலூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் தலைமையில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் தேனி மாவட்டம் கூடலூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கூடலூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது
திருக்கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு யாக கலச பூஜைகள் அபிஷேகம் பூஜைகள் ஆராதனைகள் குருக்களால் நடத்தப்பட்டது
நேற்று தளபதி ஹோமத்துடன் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் காளியம்மன் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது மேலும் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அந்த புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கும் பட்டது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் காலை 10 மணி முதல் தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது
கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றும் போது கருடன் வட்டமிட்டது பக்தர்களை பார்வையிட்டு கோஷமிட்டது கூடலூர் நகரமே அதிர்ந்தது. கூடலூர் திமுக நகரச் செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான லோகந்துரை தலைமையிலான கோவில் விழா கமிட்டினர் கும்பாபிஷேத்திற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்