ராஜபாளையம் பள்ளி மாணவி தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு!
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான தாங்-டா தேர்வு ஓசூர் அதியமான் பொறியற்கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராஜபாளையம் ஸ்ரீ ராவ் பகதூர் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 9-ம் வகுப்பு பயிலும் பிந்துஜா கலந்து கொண்டு தேசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார். வருகின்ற டிசம்பர் 3 வது வாரம் டெல்லியில் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.