தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டின் 13ம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. T.கிறி்ஸ்துராஜ் IAS தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திரு.திருவியம், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அருள்ஜோதி, தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு.விஜய் சாரதி, மூலனூர் காவல் ஆய்வாளர் திருமதி.விஜயா, கொளத்துப்பாளையம் செயல் அலுவலர் திரு.நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் திரு.சுரேஷ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதல்வர் திரு.மு.ஞானபண்டிதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்வின் தொடக்கமாக இறைவாழ்த்துப் பாடி, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி, பள்ளி மாணவர்களின் அணிவகுப்பினை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் விளையாட்டு மாணவத் தலைவர்களால் ஒலிம்பிக் விளக்கு ஏற்றி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவர்களின் செயற்பாடுகளை கண்டு மகிழ்ந்த முதன்மை விருந்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. T. கிறி்ஸ்துராஜ் அவர்கள், விளையாட்டு ஒருவரை மென்மேலும் மெருகேற்றி அனைத்து திறன்களையும் வளர்த்து அளிக்கும், விளையாட்டு வீரர்கள் நல்ல கல்வியாளர்களாகவும் திகழ்வர் என்றார்.
விழாவின் கலைநிகழ்ச்சிகளாக நடனம், ரோப் யோகா,ஜூடோ மற்றும் தேசிய மாணவர் படையினர் நடத்திய அணி வகுப்பு நடைபெற்றன. மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பையையும் , கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தடகளப் போட்டிக்கான கோப்பையினை HORATIUS அணி பெற்றனர். பின்னர் பள்ளி மாணவத் தலைவி 12ம் வகுப்பு மாணவி செல்வி.ரோஜல் ஷிவ்ரா நிகழ்வின் நன்றியுரை வழங்கினார்.
பள்ளியின் தலைவர் திரு. சிதம்பரம், பொருளாளர் திரு. சபாபதி, துணைத்தலைவர் திரு. ரங்கசாமி, செயலர். பாலசுப்பிரமணியம், இயக்குநர் திரு. செல்வராஜ் மற்றும் அறங்காவலர்கள் – திரு.ஆறுமுகம், திரு. சிவநேசன், திரு. சிவசாமி, திரு.மயில்சாமி மற்றும் திரு, நவீன் ஆகியோர் முன்னிலை வகித்து பெருமகிழ்வு கொண்டனர். மேலும் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்திய பள்ளி முதல்வர் திரு. ஞானபண்டிதன் அவர்களுக்கும், நிகழ்வின் அமைப்பாளர் துணை முதல்வர் திருமதி.இராதிகா அவர்களுக்கும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி இயக்குநர் திரு. தீபக் ராஜா அவ்ர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பிறதுறைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *