இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புரட்சி தினம் கொண்டாட்டம்…
உலக மக்களின் உழைப்பை மதிப்பதற்காக ஒப்பிலாத புரட்சியை தோழர் லெனின் ஏற்படுத்திய நவம்பர் 7 ம்தேதி புரட்சி தினமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை தெற்கு பகுதி ஜெய்ஹிந்த்புரம் மெயின் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. அப்பளத்
தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் கொடியேற்றி வைத்தார். தெற்கு பகுதி குழு உறுப்பினர்கள் பாலன் , முருகன் மற்றும் பகுதி தோழர்கள் பங்கேற்று புரட்சி தினத்தை சிறப்பித்தனர்.