மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வர வேற்பளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் இரு நாட்கள்கள் ஆய்வுகள் மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியரகம் திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதை யொட்டி, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலம் விருதுநகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க தொண்டர்கள் நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்று வரவேற்றனர்